Wednesday, October 27, 2010

தமிழ் கவிதைகள்

அன்னைக்கு முதல் வணக்கம்,
தமிழுக்குத் தலைவணக்கம்,
தமிழருக்கு வீர வணக்கம் !!!
வாழ்க தமிழ், வளர்க
தமிழினம் !!! 


தமிழ் முதல் சீனம் வறை பல மொழிகள் புரிகிறது உன் விழிகள்ப் பேசும்
வார்த்தை மட்டும் புரியவில்லை


எந்த பல்கலை கலமும் எந்த பேராசிரியரும்
விளக்க முடியாத பாசையடி


உன் விழிகள் பேசுவது..

படிக்காதவன்


அன்று தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று அள்ளிக் கொண்டது
என்னை எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!





அழகு


சிங்கத்தில் அழகு..
ஆண் சிங்கம்!

யானைஇல் அழகு
ஆண் யானை!!

மயிலில் அழகு
ஆண் மயில்!!!

மனித இனத்தில்
மட்டும் - ஏன்
பெண்கள் அழகு????
.
.
.
ஆண்கள் வர்ணிப்பதால்..






நினைவு

சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?





வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?




காதல்!


கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!


கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!
அழகிலக்கணம்


நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...



கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

விடியல் உன் கையில்




இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைபயணம்
- செய்துபார்
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
விரித்து காத்திருக்கும்

உழைப்பென்னும் உளி கொண்டு
செதுக்கிபார் - உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
உன் வெற்றி தேவதை

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்

கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை

மனிதா
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலட்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.

அஞ்சலி

தீக்குச்சியின்
மரணம்
கண்ணீர் வடிக்கிறது...
மெழுகுவர்த்தி!

அழகால் ஆபத்து

அழகாக
இருக்கின்ற
மயில்களின்
இறகுகளைத்தான்
பிடுங்குகிறார்கள்...
அண்டங்
காக்கைகளின்
இறகுகளை அல்ல!

அழகாக
இருக்கின்ற
ரோஜா
பூக்களைத்தான்
பறிக்கிறார்கள்...
எருக்கம்
பூக்களை அல்ல!



அழகு...

புள்ளி வைக்காத
எழுத்து
அழகு...
அதைவிட அழகு
பொட்டு வைக்காத
உன் நெற்றி.

காத்திருப்பு

நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்











No comments:

Post a Comment