Tuesday, March 29, 2011

நட்பு...........


எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு

*
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
 நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*
காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு









நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...



















கொடுப்பதும்,
எடுப்பதும் தான்
வாழ்க்கையும்,
கொடுத்தான்
எடுத்தும் செல்வோம்
நன் நட்பை இந்த கல்லூரியில்


கண்மூடி முழிக்கையிலே
காலை பொழுதுபல
கடந்தே செல்லுது - தினம்
கணனியின் வேகத்தில்
கடிகாரத்தின் கால்களும்
கடின நடை போடுதிங்கே - ஆனால்
கல்லூரியில் கலந்து
கற்குந்தியில் உட்கார்ந்து
கதைபேசி மகிழ்ந்து
காரணமே இல்லாமல் - பல
கள்ளத்தனம் செய்த
காலத்தில் இனைந்த நட்பு.

காலத்தின் வேகத்திலே
கலந்து ஓடி விடாது
கயவர்களின் துற்றலுக்கு அஞ்சி
கரையொதுங்காது
கண்டம் கடந்து சென்றும்
கணியின் துணை நாடி - பாச
கணைகளை தொடுக்குதிங்கே

காலத்தின் பாதையிலே
காலன் அவன் கயிற்றினால்
கட்டுண்டு கல்லறைக்கு சென்றவரே
காற்றினிலே நீவிர் சொல்லும் சேதி
காதோரம் ஒலிக்கிறது.

கரைபோட முடியவில்லை - எண்ணு
கணக்கு எதும் இதற்கில்லை
காலதி காலமெல்லாம் கடந்து
காவியம் படைகிறது

கல்லூரி நட்பினிலே.....  

      



பல நட்புகள் உண்டு..
பள்ளி நட்பு...
கல்லூரி நட்பு...
பக்கத்து வீட்டு நட்பு..
அலுவலக நட்பு..
செல்லும் இடங்களில் எல்லாம்
எதிர் பாராமல் வரும் நட்பு..
பல நட்புகள் நம்மை அறியாமல்
வலம் வரும் சூழல்....

முகம் தெரியா நட்பு
எங்கள் நட்பு என்றாலும்
முழுமையானது இன்று..
எல்லா நட்பையும் விட
எங்கள் நட்பு புனிதமானது...

நாங்கள் பார்த்ததும் இல்லை..
நாங்கள் ஒரே ஊரிலும் இல்லை...
தினமும் வருகிறோம்..
தினமும் பழகுகிறோம்..
சுயநலம் இல்லாமல்..
எதிர்பார்ப்பு எதுவும் இல்லை
எங்கள் நட்பில்...

அன்பு மட்டுமே எங்கள்
மூலதனம்..
அன்பை கொடுத்து அன்பை
பெறுகிறோம் எந்நாளும்..

ஒருவரை ஒருவர் பாராமல்
காதல் மட்டும் தான் வருமா???
நல்ல நட்பும் வரும்.....

சோர்ந்து இருக்கும் எங்கள் நட்பின்
சோகத்தை பகிர்கிறோம்...
துயர் என்றால் தோள் கொடுப்போம்...

ஆண், பெண் பாகுபாடு இல்லை..
சாதி மதம் இங்கு இல்லை..
எல்லோரும் தமிழர் இது மட்டும்
தான் எங்கள் உணர்வு..
உணர்வை கொண்டு உறவை
பெற்றோம்...
உலகம் எங்கும் உண்டு
எங்கள் உறவுகள்...

நல்ல நட்பு கிடைப்பது அரிது...
கிடைத்த நட்பை
பொக்கிஷமாக காப்பது
உன் கையில்....
நட்பை மதி..
நட்பை நினை..
நட்பை மறவாதே...